மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 37.
‘வல்லவன்’, ‘காதல் சொல்ல வந்தேன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100 டிகிரி’ உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் கார்த்திக் சபேஷ் நடித்துள்ளார்.
அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் எனக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கார்த்திக் சபேஷின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவரது தந்தை சபேஷ் உயிரிழந்த நிலையில், ஓராண்டுக்குள் அதே மாதத்தில் குடும்பத்தில் மீண்டும் ஏற்பட்ட இந்த இழப்பு தமிழ்த் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
