சமந்தாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததா? வெளியானது உண்மை!

 நடிகை சமந்தாவுக்கு குறைப்பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் சமந்தா, தனது திரைப்படப் பணிகளுக்கு இடையில் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். மேலும், சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சமந்தாவுக்கு எட்டு மாதத்திலேயே ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளதாகவும், இந்த தகவலை அவர் தரப்பினர் வெளியில் தெரிவிக்காமல் மறைத்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.

இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

எனினும், இந்த தகவல் உண்மையல்ல எனத் தெரியவந்துள்ளது. சமந்தா அண்மையில் தனது ஜிம் பயிற்சி காணொளி மற்றும் கணவருடன் பிக்கில் பால் விளையாடும் காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.

இதன் மூலம், அவருக்கு குழந்தைகள் பிறந்துவிட்டதாக பரவி வரும் தகவல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

மேலும், சமந்தாவுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் பிரசவம் எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment