நடிகர் ரஜினிகாந்துடன் பணியாற்றியது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்ததாக நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ராஷி கன்னாவிடம், “ரஜினிகாந்துடன் பணியாற்றியது எப்படி இருந்தது?” என ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவர், “ரஜினிகாந்த் தற்போது எனது நண்பராகிவிட்டார். நான் பல கேள்விகள் கேட்டாலும், அவர் புன்னகையுடன் பொறுமையாக பதிலளிப்பார். அவருக்கு நகைச்சுவை உணர்வும் அதிகம். அவ்வப்போது என்னைக் கேலி செய்வார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு பிடித்த இணை நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர் என்றும், அவரை அருகில் இருந்து கவனிப்பதன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் ராஷி கன்னா கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் ராஷி கன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
ராஷி கன்னாவின் இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
