‘ஜெயிலர் 2’ இசை வெளியீட்டு விழா எப்போது? வெளியான முக்கிய தகவல்!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அனிருத் இசையமைத்த இந்தப் படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக ‘ஜெயிலர் 2’ இசை வெளியீட்டு விழா எப்போது? வெளியான முக்கிய தகவல்!கூறப்படும் இப்படம், வரும் அக்டோபர் 15ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment