ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ படத்தின் தொடர்ச்சியாக, சுமார் 9 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தை ஆதி இயக்கியுள்ளார்.
முதல் பாகம் அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான நிலையில், ‘மீசைய முறுக்கு 2’வில் கானா இசை மற்றும் கானா கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், கருணாஸ், சைத்ரா, நாசர், ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் நாளிலிருந்தே வசூலில் கவனம் ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வசூல் தகவல் படக்குழுவினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது
