‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம், எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வெளியாகவுள்ளது.
சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி, சினேகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், திரைப்படத்தின் விளம்பர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் திரையரங்க வளாகத்தில் நயன்தாராவுக்கு 60 அடி உயர பிரம்மாண்ட கட் அவுட் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நடிகை ரெஜினா, ஒரு நடிகைக்காக இவ்வளவு பெரிய கட் அவுட் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது நயன்தாராவின் மன உறுதிக்கும் வெற்றிக்கான அர்ப்பணிப்புக்கும் சான்றாக அமைந்துள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
