டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு - சல்மான் கானைப் புகழ்ந்ததால் தாக்குதலா?


பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், தாக்குதலுக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி மும்பையின் ஜூஹு பகுதியில் டைகர் ஷெராப் பயணித்த காரை நோக்கி மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தில் அவரது சாரதியும் பாதசாரி ஒருவரும் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் ராஜஸ்தானின் கோட்டா ரயில் நிலையத்தில் மூவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் டைகர் ஷெராப், நடிகர் சல்மான் கானைப் புகழ்ந்து பேசிய கருத்துகளும் தாக்குதலுக்கான காரணங்களில் ஒன்றாக இருந்ததாக சந்தேகநபர் கூறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தக் கூற்று தொடர்பான அதிகாரபூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

சல்மான் கானுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் இடையே நீண்டகாலமாகப் பகை நிலவி வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment