கோவையில் திரிஷா - ரசிகர்களுடன் சாலை வலம்

நடிகை திரிஷா, கோவையில் தனியார் மொபைல் கடை திறப்பு விழாவில் பங்கேற்க வருகை தந்தபோது, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர், காந்திபுரம் நூறடி சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியார் மொபைல் கடையைத் திறந்து வைத்தார்.

திரிஷாவைக் காண்பதற்காக 500-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் பொதுமக்களும் திரண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் கூட்ட நெரிசலும் ஏற்பட்டன. இதையடுத்து, பொலிஸாரும் பாதுகாப்புப் பணியாளர்களும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

விழா நிறைவடைந்ததும் ரசிகர்களைப் பார்த்துக் கையசைத்த திரிஷா, சிலருடன் கைகுலுக்கினார். தொடர்ந்து, காரில் இருந்தவாறே சுமார் 100 மீற்றர் தூரம் சாலை வலம் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

முன்னதாக, ரசிகர்கள் மத்தியில் மைக்கில் பேச முயன்றபோது மைக் செயல்படாததால் அவரால் பேச முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Post a Comment