எங்கள் காலத்தில் இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது!” – சமந்தா கருத்து வைரல்

முந்தைய தலைமுறை பெண்களுக்கும் தற்போதைய தலைமுறை பெண்களுக்கும் இடையிலான அணுகுமுறை வேறுபாடு குறித்து நடிகை சமந்தா தெரிவித்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.

பெண்களின் உடல்நலம், மாதவிடாய் மற்றும் ஹார்மோன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், முந்தைய தலைமுறையினர் தங்களது உடல்நலப் பிரச்சினைகளை வெளிப்படையாகப் பேசாமல் சகித்துக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தற்போதைய தலைமுறை பெண்கள் உடல்நலம் குறித்த விழிப்புணர்வுடன் செயல்படுவதுடன், ஹார்மோன் ஆரோக்கியம், கருவுறுதல், மனநலம், தூக்கம் மற்றும் மன அழுத்தம் போன்ற விடயங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் தங்களது உடல்நலப் பிரச்சினைகளை மறைக்காமல், தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று தீர்வுகளைத் தேடுவது முக்கியம் என்பதையும் அவரது கருத்துகள் வலியுறுத்துகின்றன.

சமந்தாவின் இந்தக் கருத்துகள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளதுடன், பெண்களின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

Post a Comment