தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10ஆவது சீசனில், அடுத்தடுத்த பரபரப்பான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
சட்டப்பேரவை போன்ற டாஸ்க் ஒன்றின்போது ஏற்பட்ட மோதலால் பிக்பாஸ் வீடு பரபரப்பான நிலையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு குமரன் வெளியேறினார்.
இதனால் லட்சுமி ப்ரியா எலிமினேஷனில் இருந்து தப்பியதாக கூறப்பட்டது. தொடர்ந்து, மீதமிருந்த போட்டியாளர்களில் இருந்து வாக்குகளின் அடிப்படையில் இருவர் வெளியேறலாம் என தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் 10 வீட்டிலிருந்து சவின்யா வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
