இயக்குநர் ஜேசன் சஞ்சய் தனது கல்லூரி கால காதல் அனுபவம் குறித்து பகிர்ந்துள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கல்லூரி காலத்தில் ஒருவரை காதலித்ததாக தெரிவித்துள்ளார்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் அந்த காதல் உறவில் இருந்ததாகவும், பின்னர் சில காரணங்களால் இருவரும் சுமூகமாகப் பிரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காதல் பிரிவுக்குப் பின்னர் யுவன் சங்கர் ராஜாவின் காதல் பாடல்களை அதிகம் கேட்டதாகவும், அந்த அனுபவத்திற்குப் பிறகு வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்ததாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பதிவு ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
