ராதா–அம்பிகா இடையே திடீர் மோதல்! ரூ.46 கோடி மோசடி புகார்

ராதா-அம்பிகா, தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகள்.

 எல்லா மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்து, நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்தவர்கள். 

தற்போது ராதா படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக கலந்துகொண்டு வருகிறார். 

 அதேபோல் அம்பிகா, சின்னத்திரை-வெள்ளித்திரை என கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திய வண்ணம் உள்ளார். இதுவரை ஒன்றாக இருந்த சகோதரிகளுக்குள் இப்போது பெரிய பிரச்சனையாக வெடித்துள்ளது. 

 இன்று காலை நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளார். 

 அதாவது ரூ. 46 கோடி பணத்தை காசோலை மூலமாக அம்பிகா மற்றும் சகோதரர் மோசடி செய்ததால் ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Post a Comment