Posts

வெளியான 10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து வெற்றிநடை போடும் சூரியின் ‘மண்டாடி’!


சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

புகழேந்தி மதிமாறன் இயக்கத்தில் கடல்சார் மக்களின் வாழ்க்கை முறையில் நடைபெறும் படகுப் போட்டியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் ‘மண்டாடி’.

இதில் சூரியுடன் தெலுங்கு நடிகர் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் தயாரித்த இப்படம், கடந்த 10ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றிக்கரமான ஓடிவருகிறது.

இந்நிலையில் வெளியான 10 நாட்களில் உலகளவில் படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment