Posts

தனுஷின் 56வது படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்


தனுஷ் - இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் ‘தனுஷ் 56’ திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

சாய் அபயங்கர், ‘கட்சி சேரா’, ‘ஆச கூட’ உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். 

இவரது பாடல்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்... 

சாய் அபயங்கர் இசையமைத்த முதல் திரைப்படமாக ‘டியூட்’ வெளியானது. 

இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து ‘மார்ஷல்’, அட்லியின் ‘ராக்கா’ படம், பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படம், தனுஷின் ‘ஓம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமானார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவாகும் ‘தனுஷ் 56’ திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது.

Post a Comment