தன்னுடைய இரண்டாம் திருமணம் குறித்து சூர்யா வெளியிட்ட வீடியோ

 தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா மற்றும் ஜோதிகா, தங்களது 20வது திருமண நாளை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர்.

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் தொடங்கிய இவர்களின் பயணம், ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்தது.

காதலித்து வந்த சூர்யா – ஜோதிகா, கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், 20வது திருமண நாளை முன்னிட்டு ஸ்காட்லாந்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கியவர்களும் கலந்துகொண்டனர். திருமண நிகழ்வின் வீடியோவை ‘தி சீக்குவல்’ என இருவரும் வெளியிட்ட நிலையில், அது இணையத்தில் வைரலானது.

தொடர்ந்து சூர்யா வெளியிட்டுள்ள வீடியோவில், திருமணத்தை நடத்தி வைத்தவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், ஸ்காட்லாந்தின் இயற்கை அழகும் அங்கு சந்தித்த அன்பான மனிதர்களும் தங்களது மனதில் என்றும் நீங்காத நினைவுகளாக மாறிவிட்டதாக சூர்யா – ஜோதிகா தெரிவித்துள்ளனர்.





Post a Comment