ரச்சிதா ராமின் கன்னத்தை கிள்ளிய ரசிகர்! – வைரலாகும் வீடியோ

தமிழில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தில் நடித்து கவனம் ஈர்த்த கன்னட நடிகை ரச்சிதா ராம், நேற்று தனது 34ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதையொட்டி ரசிகர்களை சந்தித்த அவரிடம், ரசிகர் ஒருவர் செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார். நடிகையும் சிரித்தபடி போஸ் கொடுத்த நிலையில், திடீரென அந்த ரசிகர் அவரது கன்னத்தை கிள்ளி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரச்சிதா ராம், பின்னர் ரசிகர்களை சற்று எச்சரிக்கையுடன் அணுகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Post a Comment