பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்பின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதாகக் கூறப்படும் நிலையில், தகவல் அறிந்த மும்பை பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலுக்கான காரணம் என்ன, இதில் யாருக்காவது காயம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் இந்தச் சம்பவத்துக்குத் தொடர்பு இருப்பதாகவும் சில தகவல்கள் பரவி வருகின்றன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
இதற்கிடையில், டைகர் ஷெராஃப் தொடர்பான செய்தி பரவியதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

