யாரு தொப்புள் ராணின்னு பாத்துடுவோமா? போட்டி போட்டு காட்டும் சீரியல் நடிகை பிரியங்கா!

 யாரு தொப்புள் ராணின்னு பாத்துடுவோமா? போட்டி போட்டு காட்டும் சீரியல் நடிகை பிரியங்கா!


தமிழ் சினிமாவில் நடிகை திரிஷா ‘தொப்புள் ராணி’ என்று ரசிகர்களால் புகழப்படுபவர். அவரது கவர்ச்சியான தோற்றமும், பல படங்களில் அவரது தனித்துவமான பாணியும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 
ஆனால், அவருக்கு போட்டியாக அவ்வப்போது மற்ற நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமாகி வருகிறது. 

அந்த வகையில், நடிகை பிரியங்கா ஜெயின் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, ‘யார் தொப்புள் ராணி?’ என்று போட்டியைத் தூண்டும் விதமாக பேசப்படுகிறது. பிரியங்கா ஜெயின், தமிழில் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர். இந்த சீரியலில் தாவணி பாவாடை அணிந்து, பாரம்பரியமான, அப்பாவியான குடும்பப் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்ஆனால், இணையத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அவரது சீரியல் கதாபாத்திரத்திற்கு நேர் மாறாக உள்ளன. உடலோடு ஒட்டிய மெல்லிய ஆடைகளில், கவர்ச்சியை மையப்படுத்திய புகைப்படங்களை அவர் அடிக்கடி பகிர்ந்து வந்தார். தற்போது ஒரு படி மேலே சென்று, நடிகை திரிஷாவுக்கு சவால் விடுவது போல, தனது தொப்புள் தெரியும் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிரியங்காவின் இந்த முயற்சி, திரிஷாவின் ரசிகர்களிடையே விவாதத்தைத் தூண்டியுள்ளது. 

ஒருபுறம், திரிஷாவின் நீண்டகால புகழையும், அவரது நடிப்புத்திறனையும் முன்னிருத்து தொப்புள் ராணி என்றால் அது எப்போவுமே திரிஷா தான் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மறுபுறம், பிரியங்காவின் துணிச்சலான அணுகுமுறையும், இளமைத் தோற்றமும் புதிய ரசிகர்களை ஈர்க்கிறது. இது தமிழ் சினிமாவில் கவர்ச்சியை மையப்படுத்திய போட்டி மீண்டும் தலைதூக்குவதை காட்டுகிறது. 

பிரியங்கா இதன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயல்கிறாரா, அல்லது இது வெறும் விளம்பர யுக்தியா என்பது தெளிவாகவில்லை. ஆனால், இது ரசிகர்களிடையே ஒரு சுவாரஸ்யமான உரையாடலை உருவாக்கியுள்ளது. இப்படியான போட்டிகள் சினிமாவில் புதிய திறமைகளை முன்னிறுத்தினாலும், நடிப்புத்திறனை விட கவர்ச்சியை மட்டும் முன்னிறுத்துவது நீண்டகால வெற்றியைத் தருமா என்பது கேள்விக்குறியே!யாரு தொப்புள் ராணின்னு பாத்துடுவோமா? கவர்ச்சி கோதாவில் இறங்கிய சீரியல் நடிகை பிரியங்கா!





நான் இளையராஜாக்கு மருமகள்? அதிர வைத்த வனிதா விஜயகுமார்!

 வனிதா விஜயகுமார்-ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ஜோடியாக நடித்த திரைப்படம் “மிஸஸ் அண்டு மிஸ்டர்”. இத்திரைப்படத்தை வனிதா விஜயகுமாரே இயக்கியுள்ளார். வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களின் மத்தியில் மிகவும் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. 

இந்த நிலையில் இத்திரைப்படத்தில் “மைக்கேல் மதன காமராஜன்” படத்தின் சிவராத்திரி என்ற பாடல் பின்னணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பாடல் இளையராஜா இசையமைத்த பாடலாகும். அந்த வகையில் இப்பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக இளையராஜா தரப்பில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் அப்பாடலை அப்படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் முறையிடப்பட்டுள்ளது.  

இந்த நிலையில் வனிதா விஜயகுமாரிடம் இது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இந்த பாடலை பயன்படுத்த இளையராஜாவிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். எனது மகளுடன் சென்று அவரது காலில் விழுந்தேன். அவர் சரி என்று சொன்னார். நேரில் சென்று கேட்கும்போதே திட்டி இருக்கலாமே, இப்போது வந்து வழக்கு மட்டும் போடுறீங்களே” என்று கூறிய அவர், கண்களில் கண்ணீருடன், “நான் சிறு வயதில் இருந்தே அவர் வீட்டில் வளர்ந்த பெண், அவர் வீட்டுக்கு நான் மருமகளாக போகவேண்டியவள்” என்று கூறினார். வனிதா விஜயகுமார் இவ்வாறு பேசியது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 



திருமணம் செய்துகொண்ட ரவி மோகன்? திடீரென வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 ஆர்த்தியுடனான பிரிவையடுத்து ரவி மோகன், கெனீஷா என்ற பாடகியுடன் ஜோடியாக ஐசரி கணேஷ் வீட்டுத் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதனை தொடர்ந்து ஆர்த்தியும் ரவி மோகனும் ஒருவருக்கொருவர் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்து வந்தனர். இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம், “இனி இவரும் சமூக வலைத்தளங்களிலோ ஊடகங்களிலோ ஒருவருக்கொருவர் மாறி மாறி  குற்றச்சாட்டுகள் வைக்கக்கூடாது” என உத்தரவிட்டது.


இந்த நிலையில் ரவி மோகனும் கெனிஷாவும் குன்றக்குடி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அங்கே இருவரும் மாலையும் கழுத்துமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் “இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இருவரும் முருகன் ஜோடியாக முருகன் கோவிலில் தரிசனம் செய்யச் சென்றுள்ளனரே தவிர திருமணம் செய்துகொள்ளவில்லை.  



மீண்டும் சிம்புவை இயக்குகிறாரா மணிரத்னம்?

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் தக் லைப். வருகிற ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இப்படத்தை அடுத்து புதுமுகங்களை வைத்து படம் இயக்கப் போவதாக தக் லைப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது கூறிய மணிரத்னம், அந்த படத்திற்கு சரியான நடிகர்கள் கிடைக்காத பட்சத்தில் வேறு ஒரு படத்தை இயக்குவேன் என்றும் கூறியிருந்தார்.

இந்த நேரத்தில் தற்போது சிம்பு நடிக்க இருந்த 49வது படத்தின் தயாரிப்பு பணிகள் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சிம்புவிடத்தில் அந்த கால்சீட்டை வாங்கி அவரை வைத்து தனது புதிய படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம், தக் லைப் படங்களில் நடித்த சிம்பு மூன்றாவது முறையாக நடிக்கப் போகிறார். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. 

தமிழ் படங்களில் நடித்த நாகினி அனிதா

முன்னணி பாலிவுட் தொலைக்காட்சி தொடர் நடிகை அனிதா ஹசாந்தினி. 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ள இவர் 'நாகினி' தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ள அனிதா சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் என்பது பலருக்கு தெரியாது.

பாலிவுட்டில் அறிமுகமாகி இரண்டு படங்கள் நடித்த நிலையில் மூன்றாவதாக அவர் நடித்த படம் 'வருஷம் எல்லாம் வசந்தம்'. மனோஜ் பாரதிராஜா' குணால் நடித்த இந்த படத்தில் அனிதா நடித்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை ரவிசங்கர் என்ற புதுமுகம் இயக்கினார். இந்தப் படத்திற்குப் பிறகு 'சாமுராய்' படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தார்.

இந்தப் படங்களுக்குப் பிறகு பாலிவுட்டுக்கு சென்று விட்ட அனிதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய 'சுக்கிரன்' படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் விஜய் சிறப்பு தோட்டத்தில் நடித்திருந்தார். கடைசியாக 2008ம் ஆண்டு வெளிவந்த 'நாயகன்' என்ற படத்தில் ஜேகே ரித்தீஷ் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. 

விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் அவரது திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் அவரின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் மீண்டும் ஹிந்தியில் ஒரு படத்தில் நடிக்க போகிறார்.

இந்நிலையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 46வது படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் இவர்கள் கேட்கும் அதே கால்ஷீட் தேதியை விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்தில் நடிப்பதற்காக ஏற்கனவே ஒப்புக் கொண்டுவிட்டாராம். இதனால் சூர்யாவின் 46வது படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

ஏற்கனவே சூர்யா - கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ்

ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ரவிமோகன்-பாடகி கெனீஷா காதல் விவாதபொருளாகி இருக்கிறது. ரவிமோகன் பற்றி கடுமையாக விமர்சித்து ஆர்த்தி சில அறிக்கைகள் வெளியிட்டிருந்தார். இருவருமே ஒருவரை ஒருவர் தாக்கி அறிக்கை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் கண்டித்தது.

பாடகி கெனீஷா 'என்னை பற்றி அவதூறு பதிவுகளை 48 மணி நேரத்தில் நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சமூக வலைத்தளங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தன்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டு உள்ள அவதூறு கருத்துகளை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு ரவி மோகன் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில் “நடிகர் ரவி மோகன் திருமண சர்ச்சை தொடர்பான அனைத்து அவதூறு செய்திகளையும் 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும். பேஸ்புக், எக்ஸ், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் என அனைத்து தளங்களுக்கும் இது பொருந்தும். அப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் அந்த பதிவுகள் நீக்கப்படவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என குறிப்பிடப்பட்டு உள்ளது. 

கிரண் பாடலுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்புவாரா

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, நடித்திருக்கும் படம் மிஸஸ் அண்ட் மிஸ்டர். இந்த படத்தை அவர் மகள் ஜோவிகா தயாரித்து இருக்கிறார். ராபர்ட் மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ளார். 40 வயதை தாண்டிய தம்பதிகளின் காதல், கர்ப்ப பிரச்னைகளை கதை பேசுகிறது. இந்த படத்தில் கிரண் ஆடிய ஒரு கவர்ச்சி பாடல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது, மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இளையராஜா இசயைமைத்த ராத்திரி சிவராத்திரி பாடலுக்கு ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து படு கவர்ச்சியாக டான்ஸ் ஆடியிருக்கிறார் கிரண்.

இந்த படத்துக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா, ஒரு வகையில் இளையராஜா குடும்பத்துக்கு சொந்தக்காரர் என்றாலும், முறைப்படி ரைட்ஸ் வாங்கி இந்த பாடலை படத்தில் பயன்படுத்தி இருக்கிறாரா? அல்லது வழக்கம்போல் இளையராஜா தரப்பு நோட்டீஸ் அனுப்புமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய மைக்கேல் மதன காமராஜன் படத்தில் அந்த பாடலை இளையராஜா இசையில் மனோ, சித்ரா பாடியிருந்தனர். கமல்ஹாசன், ரூபினி ஆடியிருந்தனர். இதே படத்தில் இடம் பெற்ற பேரு வெச்சாலும் பாடலை, சந்தானம் நடித்த டிக்கிலோனா படத்தில் ரீமிக்ஸ் பண்ணியிருந்தார் யுவன்ஷங்கர்ராஜா.

அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் 6 ஹீரோயின்கள்

ஒரு படத்தில் இரண்டு அல்லது 3 ஹீரோயின் இருந்தாலே அந்த படக்குழுவுக்கு, தயாரிப்புக்கு தரப்புக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் வெடிக்கும். ஹீரோயின்களுக்கு இடையேயான ஈகோ பிரச்னை வரும். எனக்கு அதிக சீன் வேண்டும். எனக்கு அந்த காஸ்ட்யூம் தேவை, அவளுக்கு மட்டும் அந்த பாடலா போன்ற விவாதங்கள் நடக்கும். ஆனால், அல்லு அர்ஜூனை வைத்து தான் இயக்கும் படத்தில் 6 ஹீரோயின்களை நடிக்க வைக்கப் போகிறாராம் அட்லி.

பான் இந்தியா படம் மாதிரி, பான் வேர்ல்ட் கதையாக அந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகப் போகிறது. அதனால், இத்தனை ஹீரோயின்களாம். இதில் அட்லிக்கு பிடித்த சமந்தா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோர் இடம் பெறுவார்களா என தெரியவில்லை. ஸ்ரீலீலா, ராஷ்மிகா, தீபிகா படுகோனே, கியாரா அத்வானி, ஊர்வசி ரவுட்டாலா என பல ஹீரோயின்களும் அந்த பட வாய்ப்பை பிடிக்க போட்டியில் இறங்கி இருக்கிறார்கள்.

என்னது 6 ஹீரோயின்களா? மச்சக்கார ஹீரோ என்று மற்ற ஹீரோக்கள் அல்லு அர்ஜூனை புகழ்வது தனிக்கதை. 

ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார்

ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் என பல படங்களில் நடித்தவர் கிரண். கதாநாயகி வாய்ப்பு குறைந்த பிறகு கேரக்டர் ரோல்களிலும் நடித்தார். 

அதோடு சமீபகாலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் கிரண், கவர்ச்சிகரமான புகைப்படங்கள், வீடியோக்களையும் வெளியிட்டு அதற்கென தனியாக ஒரு ஆப் ஒன்றையும் உருவாக்கி கல்லா கட்டி வருகிறார். இதனால் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்கிறார்.

இந்த நிலையில், தற்போது கிரணின் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛சிலர் தனி மனித உரிமை மரியாதையை குறைக்கும் வகையில் போலியான மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களை பரப்புகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கிறேன். இந்த வீடியோவை பகிர்வது பதிவிறக்கம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார். 

நள்ளிரவில் சுவாசிகாவிடம் சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி

கடந்த வாரம் சூரி நடிப்பில் குடும்ப கதையம்சத்துடன் அதுவும் தாய்மாமன் என்கிற உறவு முறையை உயர்த்தி பிடிக்கும் விதமாக மாமன் என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் சூரியின் அக்காவாக சுவாசிகாவும், சூரியின் மனைவியாக ஐஸ்வர்ய லட்சுமியும் நடித்திருந்தனர். 

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். லப்பர் பந்து படத்தில் நடித்ததன் மூலம் நடிகை சுவாசிகா இந்தப்படத்திலும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அதேசமயம் ஐஸ்வர்ய லட்சுமிக்கும் படத்தில் குறை சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை. அவரும் நன்றாகவே நடித்திருந்தார்.

ஆனாலும் அவருக்கு தனது நடிப்பின் மீது கொஞ்சம் சந்தேகம் இருந்துள்ளது. ஒருநாள் நள்ளிரவு 3 மணி அளவில் சக நடிகையான சுவாசிகாவுக்கு மெசேஜ் செய்து, “நான் நல்ல நடிகை என்று நினைக்கிறீர்களா? இப்போது என்னுடைய வேலையை நான் சரியாக செய்து வருகிறேனா?” என்று கேட்டுள்ளார். 

இந்த தகவலை கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற மாமன் பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் சுவாசிகா. அப்போது உடன் பங்கேற்ற நடிகர் சூரி, “இப்படி ஒவ்வொரு கலைஞர்களுக்கும் இதுபோன்ற சந்தேகங்கள் எழுவது இயல்பான ஒன்றுதான். ஐஸ்வர்ய லட்சுமி நிச்சயமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்” என்று தன் பங்கிற்கு பாராட்டை தெரிவித்தார். 

முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான்

 உலகளவில் பிரபலமான இசையமைப்பாளர் தமிழகத்தை சேர்ந்த ஏஆர் ரஹ்மான். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றவர். தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை கடந்தாண்டு பிரிவதாக அறிவித்தார். 

28 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்களின் பிரிவு திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்கள் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் உடன் ரஹ்மான் நேரத்தை செலவிட முடியாதது, சாய்ரா பானுவிற்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு என இவர்கள் பிரிவு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டது.

இந்நிலையில் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார். ரஹ்மானிடம் தொகுப்பாளினி டிடி யாரிடமாவது ஒருவரிடம் மன்னிப்பு கேட்க விரும்பினால் யாரிடம் கேட்பீர்கள் என கேட்டார். 

அதற்கு ரஹ்மான், ‛‛எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கணும். குறிப்பாக என் மகள், மகன் உள்ளிட்ட குடுபத்தினரிடமும், முன்னாள் மனைவி சாய்ராவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். வேலை வேலை என இருந்துவிட்டதால் குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிட முடியவில்லை என்றார். மேலும் என் உசுரே ரசிகர்கள் தான், அவர்கள் இல்லையென்றால் என் வண்டி ஓடாது" என தெரிவித்தார். 

ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

நடிகர் ரவி மோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து, விவாகரத்து கோரி சென்னை, குடும்பநல நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. அதேசமயம் பாடகி கெனிஷா உடன் நெருக்கம் காட்டிய ரவி, அவருடன் திருமண நிகழ்வு ஒன்றில் ஜோடியாக வந்தார்.

இதன்பின் ரவியை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார் ஆர்த்தி. அதில், ‛அப்பா என்பது வார்த்தை அல்ல, பொறுப்பு' என்றார். பதிலுக்கு ரவி, ‛தன்னை பொன் முட்டையிடும் வாத்தாக பார்த்தனர். அவர்களது கடனுக்கு என்னை உத்திரவாதம் போட சொல்லி கட்டாயப்படுத்தினர்' என அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு ரவியின் மாமியாரும், ஆர்த்தியின் அம்மாவுமான சுஜாதா, ‛‛ரவி சொல்வது பொய், அவரை ஒருபோதும் எனது கடனுக்கு பொறுப்பேற்க சொல்லவில்லை'' என்றார். தொடர்ந்து ஆர்த்தி, ‛எங்களுக்குள் ஏற்பட்ட பிரிவுக்கு எங்கள் வாழ்வில் வந்த மூன்றாவது நபர் தான் காரணம்' என பாடகி கெனிஷாவை விமர்சித்தார்.

இதை வைத்து கெனிஷாவை பலரும் வசை பாடினார். பதிலுக்கு கெனிஷாவும், ‛நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண். எனக்கு கொலை மிரட்டல் வருகிறது' என தெரிவித்தார். இப்படி மாறி மாறி இவர்கள் அறிக்கை வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் பொது வெளியில் தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை ஆர்த்தி, அவரது அம்மா வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரவி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரவி மோகன், ஆர்த்தி ஆகியோர் பொது வெளியில் பரஸ்பரம் அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அட்லிக்கு டாக்டர் பட்டம்

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து, 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லி. அதன்பிறகு விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கினார். பின்பு பாலிவுட்டுக்கு சென்ற அவர் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வெற்றி பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. அடுத்து அல்லு அர்ஜூனின் 22வது படத்தை இயக்க இருக்கிறார்.

இது தவிர 'சங்கிலி புங்கிலி கதவ திற, அந்தகாரம்' என்ற தமிழ் படங்களையும், 'பேபி ஜான்' என்ற இந்திப் படத்தையும் தயாரித்தார். இந்த நிலையில் அட்லியின் கலைச் சேவையை பாராட்டி சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

வருகிற ஜூன் மாதம் 14ம் தேதி சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 34வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. அந்த விழாவில் அட்லிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி?

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரி, 'விடுதலை, கருடன், மாமன்' போன்ற படங்களின் மூலம் கதாநாயகன் பாதைக்கு திரும்பியுள்ளார்.

தற்போது 'மாமன்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் சிம்புக்காக நகைச்சுவை கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். 

சிவகார்த்திகேயனுக்காக நீங்கள் நடிப்பீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சூரி கூறுகையில், "நான் சரி என சொன்னாலும் தம்பி சம்மதம் சொல்லமாட்டார். அண்ணா நாம் இருவரும் இணைந்து நடிப்பதாக இருந்தால் சரிசமமான கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என தம்பி சொல்லி இருக்கிறார். அப்படி ஒரு கதை அமைந்தால் கண்டிப்பாக இணைந்து நடிப்போம்" எனத் தெரிவித்தார். 

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ்

இந்தியாவின் ஏவுகணை மனிதர் என அழைக்கப்படுவர் ஏபிஜே அப்துல் கலாம். நாற்பதாண்டுகளாக விஞ்ஞானியாக இருந்து இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பணிசெய்தவர்.

இன்றும் இளைஞர்கள் மனதில் ஒளித்து கொண்டிருக்கும் பெயர் அப்துல் கலாம். தற்போது அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றை படமாக உருவாக்க உள்ளனர். 

ஏ.ஏ. ஆர்ட்ஸ், ஏ.கே. என்டர்டெயின்மென்ட் மற்றும் டி சீரியஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 'கலாம் தி மிசெல் மேன் ஆப் இந்தியா' என்ற பெயரில் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் நடிகர் தனுஷ், அப்துல் கலாம் ஆக நடிக்கிறார். இந்த படத்தை ஓம் ராவுத் இயக்குகிறார் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.