2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 122 முதல் 140 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக ‘பீப்பிள்ஸ் இன்சைடு’ எக்சிட் போல் கணித்துள்ளது. இதில் மிகவும் வியக்கத்தக்க வகையில், விஜய்யின் தவெக 40 இடங்கள் வரை கைப்பற்றி, தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும் பிரதான மாற்றமாகவும் உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 60-70 இடங்களை பெறும் நிலையில், தவெகவின் இந்த வரவு வரும் மே 4 தேர்தல் முடிவுகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
