மீண்டும் தள்ளி போகிறதா ரீலிஸ் திகதி

மீண்டும் தள்ளி போகிறதா ரீலிஸ் திகதி

கீது மோகன்​தாஸ் இயக்​கத்​தில் யாஷ் கதா​நாயக​னாக நடித்​துள்ள படம், ‘டாக்​ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன்​-அப்​ஸ்’.

இதில் கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி, ருக்​மணி வசந்த் என பலர் நடித்​துள்​ளனர். கன்​னடம், ஆங்​கிலத்​தில் உருவாகி​யுள்ள இப்​படம் இந்​தி, தெலுங்​கு, தமிழ், மலை​யாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது.

கேவிஎன் புரொடக் ஷன்ஸ் நிறு​வனம் யாஷின் மாஸ்​டர்​ மைண்ட் நிறு​வனத்​துடன் இணைந்து தயாரித்​துள்ள இப்​படம் மார்ச் 19 ஆம் திகதி வெளி​யாக இருப்​ப​தாக அறிவிக்​கப்​பட்டு இருந்​தது. ஆனால் மத்​திய கிழக்கு நாடு​களில் நடந்து வரும் போர் காரண​மாகப் படத்தின் ரிலீஸ் திகதி​யை, ஜூன் 4 ஆம் திகதிக்​குத் தள்ளிவைப்​ப​தாக படக்​குழு அறி​வித்​திருந்​தது.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் ரிலீஸ் மீண்​டும் தள்ளி வைக்கப்படுவதாகத் தகவல் வெளி​யானது. இதை படக்​குழு தரப்பில் மறுத்​துள்​ளனர். இப்​படத்​துக்​கான புரமோஷன் பணி​கள் விரை​வில் தொடங்க இருப்​ப​தாகப் படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

About the Author

You may like these posts

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.