அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போன இயக்குநர் பாரதிராஜாவை நடிகை ராதிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ள காணொளி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
1977 ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் தான் பாரதி ராஜா.
இவர் தமிழ் சினிமாவில் தனக்கென அழிக்கமுடியாத அடையாளத்தை உருவாக்கிக்கொண்டவர். ஏராளமான திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தேசிய விருதுகளை வென்றுள்ளார்.அவருக்கு பத்ம ஸ்ரீவிருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.
ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன பாரதிராஜா! ராதிகாவுடன் பேசும் காணொளி வைரல் | Radhika Met Director Bharathiraja Video Goes Viral
அவரின் மகன் மனோஜ் பாரதி (48) கடந்த மார்ச் 2025-ல் மாரடைப்பால் காலமானார். இந்த பேரிழப்பால் பாரதிராஜா மனமுடைந்து காணப்படுகிறார், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். சமீபத்தில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெற்று வந்த பாரதி ராஜா பின்னர் சிறுது உடல் நலம் தேறி பொது பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன பாரதிராஜா! ராதிகாவுடன் பேசும் காணொளி வைரல் | Radhika Met Director Bharathiraja Video Goes Viral
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து அண்மையில் வீடு திரும்பினார். ஆனால், உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.
பாரதிராஜாவை, நடிகை ராதிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ள காணொளி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் இணையத்தில் வைரலாகியுள்ளது.
குறித்த காணொளியில் நடிகை ராதிகா “நல்லா இருக்கீங்களா?.. தாய் கிழவி படம் பார்த்தீர்களாமே” என கேட்க, “தேசிய விருது உனக்கு கிடைக்க வேண்டும். படம் நன்றாக இருக்கிறது” என கூறுகிறார்.
நீங்க சொன்ன மாதிரி நடக்கட்டும் தேசிய விருத உங்க கால்ல வைச்சு ஆசீர்வாதம் வாங்குறேன்” என ராதிகா குறிபிட்டுகின்றார். இந்த நெகிழ்ச்சியாக தருணம் தற்போது இணையத்தில் பெருமளவில் கவனம் பெற்று வருகின்றது.
