இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு மே 21-ஆம் தேதி படம் உலகமெங்கும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “கடந்த காலம் ஒருபோதும் அமைதியாக இருப்பதில்லை” என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
