கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’ படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், மலையாள நடிகர் பாசில் ஜோசப் இதில் ரஜினியின் மகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் தான் ஒரு பெரிய படத்தில் இணைந்துள்ளதாக பாசில் ஜோசப் சூசகமாக தெரிவித்திருந்தது, அவர் ரஜினியுடன் இணைகிறார் என்ற எதிர்பார்ப்பை சமூக வலைதளங்களில் மேலும் அதிகரித்துள்ளது.
