நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ், மிஷ்கினுடன் இணைவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
