தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று (ஏப்., 28) திருச்செந்தூரில் கோயிலில் அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இந்நிலையில், நாளை (ஏப்., 29) அவர் ஷீரடி சென்று சாய் பாபாவை தரிசிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
