சேரன் திருமணம் பிரச்சனைக்கு இடையில் நடேசனுக்கு ஏற்பட்ட சோகம்… அய்யனார் துணை எபிசோட்

சேரன் திருமணம் பிரச்சனைக்கு இடையில் நடேசனுக்கு ஏற்பட்ட சோகம்… அய்யனார் துணை எபிசோட்

தாலியை கழுத்தில் வைத்து கட்டும் நேரத்தில் சந்தா உறவினர்கள் துப்பாக்கி வைத்து மிரட்டி அவரை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுவிட்டனர்.

அந்த சம்பவம் நடந்ததில் இருந்தே சேரன் ஒருமாதிரி சோகமாகவே இருந்தார். இதனால் சந்தா வீட்டினரிடம் பேசிவிடலாம் என சோழன்-நிலா, சேரன் 3 பேரும் பீகார் சென்றனர். அவர்கள் சந்தாவை அப்பாவை பார்த்து பேசி இப்போது 6 மாதம் டைம் கேட்டுள்ளனர்.

அதற்குள் ரூ. 25 லட்சம் பணம், நகை எல்லாம் சேர்த்த பின் சந்தாவை திருமணம் செய்துவைக்க கேட்டுள்ளனர்.

இன்றைய எபிசோடில், சந்தா அப்பா சோழன் சொன்ன விஷயத்திற்கு ஓகே கூறிவிட்டார். பின் சேரன்-சந்தாவை சந்தித்து இருவரும் பேசிக்கொண்டார்கள். பின் சேரன், சோழன், நிலா 3 பேரும் சென்னை கிளம்பிவிட்டனர்.

பின் சென்னையில், பாண்டி தனது கடையில் வேலை செய்துகொண்டிருக்கும் போது நடேசன் அவரது கடை பக்கம் நடக்க முடியாமல் சைக்கிள் தள்ளிக்கொண்டு வந்து உட்காருகிறார். தண்ணீர் வாங்கி குடித்தவர் ஒரு மாதிரி காணப்பட பாண்டி என்ன ஆனது என கேட்கிறார்.

அதற்கு நடேசன், சைக்கிளில் வந்துகொண்டிருந்தேன் தலை சுற்றியது, என்னை மருத்துவமனை அழைத்து செல்கிறாயா என கேட்கிறார். உடனே பாண்டி, சரி என்று ஆட்டோ பிடித்து தனது அப்பாவை மருத்துவமனை அழைத்து செல்கிறார்.

அவரை செக் செய்ததில் BP 190 இருக்கிறது, அதிகமாக இருப்பதாக மருத்துவர் கூறி மாத்திரை கொடுக்கிறார். அதனை பெற்றுக்கொண்டு நடேசனை கடைக்கு அழைத்து வந்த பாண்டி கொஞ்சம் ஜுஸ் கொடுத்து மாத்திரை எல்லாம் கொடுத்து அவரை படுக்க வைக்கிறார்.

அப்பா உடல்நலம் சரியில்லாமல் இருப்பதை பார்த்து பாண்டி மிகவும் வருந்துகிறார்.

 

 

 

About the Author

You may like these posts

0 Comments

Your email address will not be published. Required fields are marked *

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.