நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர்த்து எஸ்.ஜே. சூர்யா, வித்யாபாலன், மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
ஜெயிலர் 2 படத்தில் இன்னும் ஒரு கேமியோ கதாபாத்திரம் காட்சி படமாக்குவது மட்டும் மீதமுள்ளது. முதலில் ஷாரூக்கான் நடிப்பதாக இருந்தது. அவர் நடிக்கவில்லை. அதன்பிறகு பாலகிருஷ்ணா, பவன் கல்யாண் உள்ளிட்ட நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவை எதுவும் கைகூடவில்லை.
இந்த நிலையில் இப்போது இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது.
