தீபாவளி வெளியீடாக சூர்யா - 47?

நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான கருப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகியதுடன் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, சூர்யாவின் 47வது திரைப்படமும் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. இதனை, இயக்குநர் ஜித்து மாதவன் இயக்க, நடிகை நஸ்ரியா ஜோடியாக நடிக்கிறார்.

இதில், நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதால் பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது. தற்போது, இப்படத்தைத் தீபாவளி வெளியீடாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே ஆண்டில் சூர்யாவின் 3 திரைப்படங்கள் வெளியீட்டை காணவுள்ளது அவரது ரசிகர்களிடம் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. 

Post a Comment