ஓடிடியில் வெளியாகும் 'லீடர்'

லெஜண்ட் சரவணனின் லீடர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிகராகவும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்திருந்த லெஜண்ட் திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து, துரை செந்தில் குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன், லீடர் படத்தின் நடித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்தப் படத்தில், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

முழு ஆக்சன் திரைப்படமாக உருவான லீடர் திரைப்படம், ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகத் தகவல் வெளியானது.

லெஜெண்ட் சரவணா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள ‘லீடர்’ திரைப்படம், இன்று(மே 29) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

Post a Comment