நடிகை சோபிதா துலிபாலா வேட்டுவம் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் பா. இரஞ்சித் நீண்ட காலமாக வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்ததாகத் தகவல் வெளியானாலும் மீண்டும் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிகர்கள் ஆர்யா, விஆர் தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் கிளிம்ஸ் விடியோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது. கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும் அறிவியல் புனைவாக இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய சோபிதா துலிபாலா, “வேட்டுவம் என் மிகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படமாக இருக்கும். இயக்குநர் பா. இரஞ்சித் சில பகுதிகளை சயின்ஸ் பிக்ஷன் பாணியிலும் படமாக்கி வருகிறார். வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் சுவாரஸ்யமான படமாகவே வேட்டுவம் உருவாகி வருகிறது.” எனக் கூறியுள்ளார்.
