இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இறுதியாக இயக்கிய பைசன் திரைப்படம் வெற்றி பெற்றதால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பட்டியலில் இணைந்தார். இதுவரை தோல்விப்படமே கொடுக்காத இயக்குநராகவும் அறியப்படுகிறார்.
தற்போது, அடுத்ததாக வாழை - 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர்கள் கதிர், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இளையராஜா இசையமைக்கிறாராம்.
இந்த நிலையில், நாளை (ஜூன் 1) காலை 10 மணிக்கு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார்.
