தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி வயதுமூப்பு காரணமாக இன்று சனிக்கிழமை காலமானார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக உள்ளவர் அஜித்குமார். இவரது தாயார் மோகினி மணி (வயது 84). இவர் சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக இன்று காலை சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
கடந்த 2023 இல் உடல்நலக்குறைவு காரணமாக தந்தை சுப்பிரமணியம் காலமானார். தந்தை இறந்த இரண்டு ஆண்டிற்குள் தாய் மோகினி மணி உயிரிழந்த செய்தி அஜித் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயாரின் மறைவுச் செய்தியறிந்து, டுபையில் இருந்த அஜித் சென்னை விரைந்துள்ளார்.
மோகினி மணியின் இறுதிச் சடங்கு நாளை சென்னையில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித்குமார் தாயார் மோகினி மணி மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஜித் தாயாரின் மறைவுக்கு திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
