'ஹார்ட்டின்' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

ஹார்ட்டின் படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜில் ஜங் ஜக், பேட்டை, மகான் ஆகிய படங்களின் மூலம் புகழ்பெற்ற நடிகர் சனந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘ஹார்ட்டின்’. அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மடோனா செபாஸ்டியன், இமையா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு நேரம், பிரேமம் போன்ற மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டிரிடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வரவேற்பைப் பெற்ற நிலையில் வருகிற ஜூன் 26 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Post a Comment