'பிளாஸ்ட்' - அதிகரிக்கும் திரைகள்!

நடிகர் அர்ஜுன் நடித்த பிளாஸ்ட் திரைப்படத்தின் திரைகள் அதிகரித்துள்ளன.

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவான பிளாஸ்ட் திரைப்படத்தில் நடிகர்கள் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்த ஆகியோர் நடித்துள்ளனர்.

முழுமையான ஆக்சன் திரைப்படமாக உருவான இதில் கராத்தே தெரிந்த அர்ஜுன் குடும்பம் எப்படி வில்லன்களுடன் மோதுகிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக எடுத்ததால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனால், டிக்கெட் முன்பதிவுகள் அதிகரித்து வருவதால் முதல் நாளைவிட கூடுதலாக அதிக திரைகள் இப்படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கருப்பு திரைப்படமும் அதிக திரைகளில் இருப்பதால் இந்த வார முடிவில் பிளாஸ்ட்க்கு பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment