நடிகர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு புரோமோ வெளியாகியுள்ளது.
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் மூலம் இயக்குநராக நல்ல வரவேற்பைப் பெற்றவர் அபிஷன் ஜீவிந்த். தொடர்ந்து, வித் லவ் என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்தும் கவனம் ஈர்த்தார். வணிக ரீதியாக அப்படம் வெற்றிப்படமானதால், அடுத்ததாக அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இதில், நடிகர் சிவராஜ்குமார் அபிஷனுக்கு அப்பாவாக நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் படப்பிடிப்பும் சென்னையில் துவங்கியுள்ளது. இந்த நிலையில், படத்தின் அறிவிப்பு கிளிம்ஸ் விடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.
