நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள அவரது 111-ஆவது படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த விடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் பாலகிருஷ்ணா 1974 முதல் நடித்து வருகிறார். முதன்முதலாக 1984ல் சாகசமே ஜீவிதம் எனும் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தினார்.
ரித்தி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கிவருகிறார். இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத் குமார், அபிமன்யு சிங், ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு க்ளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது. முன்னதாக, நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் கடந்தாண்டு நவ.18ல் சிறப்பு விடியோவை வெளியிட்டிருந்தனர்.
ஏற்கெனவே, நடிகர் பாலய்யா மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் ஜெய் சிம்ஹா, ஸ்ரீ ராம ராஜ்ஜியம் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
