ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் - 2 திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் - 2 திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 19 அன்று தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தின் முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி 2,000 கோடி வசூலைத் தொட்டது.
இந்த நிலையில், துரந்தர் - 2 திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று மாலை சிறப்பு பிரீமியர் காட்சி வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை (ஜூன் 5) முதல் ஓடிடியில் இப்படத்தைக் காணலாம்.
சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
