ரேனிகுண்டா - 2 திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ரேனிகுண்டா”. அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் 5 சிறுவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து இயக்குநர் பன்னீர் செல்வத்தின் இயக்கத்தில் கடந்த 2017 வெளியான “கருப்பன்” படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கி தயாரிக்கும் “ரேனிகுண்டா 2” படத்தின் அறிவிப்பு போஸ்டர் இன்று (ஜூன் 5) வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் மனு ரவிச்சந்திரன் இசையில் உருவாகும் இப்படத்தின் பாடல்களை பாடலாசிரியர்கள் யுகபாரதி மற்றும் விவேகா ஆகியோர் எழுதுகின்றனர்.
