நிறங்கள் மூன்று, தருணம் போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் நாயகனாக நடித்துள்ள படம், ‘ஆல் பாஸ்’. ஜனனி நாயகியாக நடித்துள்ளார். சரத் லோகித்சவா, ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி என பலர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார்.
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா.ஆர் தயாரித்துள்ள இப்படத்தை மைதீன் இயக்கியுள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “வடசென்னை என்றாலே அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படம் இது. 45 நாட்கள் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முடித்திருக்கிறோம். படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
