விஜய் ஆண்டனி - மந்திர மூர்த்தி படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

நடிகர் விஜய் ஆண்டனி இயக்குநர் மந்திர மூர்த்தி கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.

தமிழில் வித்தியாசமான கதைகளில் நடிக்கக் கூடியவர் நடிகர் விஜய் ஆண்டனி. இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான மார்கன், சக்தித் திருமகன் ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விமர்சகர்களிடம் கவனம் பெற்றது.

தற்போது, விஜய் ஆண்டனி அயோத்தி திரைப்படத்தின் மூலம் பெரிதாக கவனிக்கப்பட்ட இயக்குநர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான அயோத்தியில் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் மனித நேயத்துடன் கூடிய மத நல்லிணக்கத்தையும் பேசும் படமாக உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post a Comment