நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது.
மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் சேயோன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
நாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸும் முக்கிய கதாபாத்திரத்தில் பால சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் மதுரை வாழ்வியல் சார்ந்த படமாக உருவாகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் தன் மகன் பவன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் சமீபத்தில் விருந்தளித்தது குறிப்பிடத்தக்கது. இதன் விடியோ வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு அதிகாரபூர்வமக அறிவித்துள்ளது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் சேயோன் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
