ஜனநாயகன் அப்டேட்: சோகத்தில் எச்.வினோத்

 தமிழக முதல்வர் விஜய் நடித்த "ஜனநாயகன்" பற்றி இப்போது அதிகம் யாரும் பேசுவது இல்லை. அவரின் பிறந்தநாளைக்கு படம் வரும், ஜூன் 19ல் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு என்று பேசப்பட்ட நிலையில், அதற்கான சாத்தியங்கள் இல்லை என்று தெரிந்துவிட்டது. இன்னமும் படத்துக்கு சென்சார் கிடைக்கவில்லை. அதனால், தமிழக முதல்வர் பிறந்தநாள் கொண்டாட்டமாக "மெர்சல்" படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்கள். ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சிக்கல் தொடர்கிறது.

 குறிப்பாக, சட்டரீதியான சில பிரச்னைகள் இருக்கிறது. அது தீர்க்கப்படவில்லை. அதனால், பட ரிலீசில் பிரச்னை தொடர்கிறது. எப்போது ரிலீஸ் ஆகும் என யாருக்கும் தெரியவில்லை என்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் ஜனநாயகன் படத்தை விரைவில் ஓடிடியில் ரிலீஸ் செய்யலாம்.

அதற்கான இழப்பை ஈடுகட்ட, தயாரிப்பாளருக்கு வேறுவகையில் ஏதாவது செய்யலாம். அவர் பிரபல தொழிலதிபர் என்பதால் இந்த அரசு மூலமாக அவர் தொழிலுக்கு உதவலாம் என்ற ரீதியில் பேச்சு வார்த்தை போகிறதாம். இதற்கிடையில் ஜனநாயகன் வராததால் ரொம்பவே சோகத்தில் இருப்பது எச்.வினோத்தானாம். அவருக்கு பேசிய சம்பளத்தில் பாதிதான் இதுவரை வந்து இருக்கிறதாம். அடுத்த படத்தையும் கமிட்பண்ணாமல் இரண்டு ஆண்டுகளாக இந்த படத்துடன் பயணம் செய்து வருகிறார். 

Post a Comment