சம்பளத்தை உயர்த்தினாரா திரிஷா

சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து தற்போது திரைக்கு வந்துள்ள படம் கருப்பு. ஆர்.ஜே .பாலாஜி இயக்கியுள்ள இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை திரிஷா உயர்த்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சமீபத்தில் தமிழில் தயாராகும் ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்க திரிஷாவை அணுகியபோது அவர் 10 முதல் 12 கோடி சம்பளம் கேட்டதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. 

இதை குறைக்க படக்குழு அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். சிரஞ்சீவிக்கு ஜோடியாக தெலுங்கில் நடித்துள்ள விஸ்வாம்பரா படத்தில் நடிக்க ஐந்தாறு கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ள திரிஷா இரண்டு ஆண்டுகளுக்குள் கருப்பு படத்தின் ஹிட் காரணமாக இப்படி உயர்த்தி இருப்பது கோலிவுட் மற்றும் டோலிவுட் தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம். 

Post a Comment