100 கோடி வசூலித்த சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்



நடிகை சமந்தா தயாரித்து, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குத் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. 

தமிழில் 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் வெளியான இத்திரைப்படத்தை பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். 

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமந்தா ஆக்ஷன் கதைக்களத்தில் இறங்கியுள்ளதால், ரசிகர்களிடம் இப்படம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படம் வெளியான 22 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இதன் மூலம் தெலுங்கு சினிமா வரலாற்றில், பெண் நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக இது முதலிடத்தைப் பிடித்துள்ளது. 

இந்த இமாலய வெற்றியை தயாரிப்பாளரான சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Post a Comment