கவிஞர் வைரமுத்து இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
1980ம் ஆண்டில் பாராதிஜாவின் நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியாரக அறிமுகமாகி, இது ஒரு பொன் மாலைப் பொழுது என்ற ஹிட் பாடல் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார்.
இதுவரை சுமார் 8000 பாடல்களை அவர் எழுதி இருக்கிறார். திரைப்பாடல்கள் மட்டுமின்றி, கவிதைகள், நாவல்கள், சிறுகதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, சுயசரிதை என்று எல்லா இலக்கிய வடிவங்களையும் எழுதிச் சாதனை படைத்துள்ளார் கவிஞர் வைரமுத்து இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் முன்னிட்டு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் கமல்ஹாசன் கவிஞர் வைரமுத்துவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பாட்டுக்குள் கவித்துவத்தைப் பொதிந்துவைத்த கவிதைத் தோழர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். வாழிய நீடு.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
