251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா?


 மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான போனி கபூரின் முதல் மனைவி மோனா கபூரின் மகள் அன்ஷுலா கபூரின் திருமணக் கொண்டாட்டம் தற்போது பாலிவுட்டில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த திருமண விழாவில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். குறிப்பாக, நடிகை ஜான்வி கபூர் பாரம்பரிய பட்டுச் சேலையில் தோன்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகின்றன.

இதற்கிடையில், திருமண விழாவின் மற்றொரு முக்கிய பேசுபொருளாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அணிந்திருந்த ஆடம்பர கைக்கடிகாரம் மாறியுள்ளது.

பிங்க் நிற உடையில் ஸ்டைலாக வந்திருந்த அவர், கையில் அணிந்திருந்த அந்த லக்சுரி வாட்ச் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

வெளியான தகவலின்படி, அந்த கைக்கடிகாரத்தில் 251 வைரக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதுடன், தங்க டயல் (Gold Dial) வடிவமைப்பும் இடம்பெற்றுள்ளது. அதன் மதிப்பு சுமார் ₹2.5 கோடி எனக் கூறப்படும் தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜான்வி கபூரின் பிரம்மாண்டமான தோற்றமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த வாட்சும் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


Post a Comment