தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கட்டா குஸ்தி.
இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஆக்ஷன் கதாநாயகியாக மிரட்டியிருந்தார். இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவந்தது கட்டா குஸ்தி
கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 32 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
