அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த Heart Beat சீசன் 3.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த அறிவிப்பு வீடியோ..


 

ரசிகர்களின் மனம் கவர்ந்த வெப் தொடர் Heart Beat. ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த இரண்டு சீசன்கள் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், 3-வது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர்.

கடந்த ஜூன் மாதம் Heart Beat சீசன் 3 ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. மேலும் அறிவிப்பு வீடியோ கூட எதுவும் வரவில்லையே என ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

இந்த நிலையில், தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் வகையில் Heart Beat சீசன் 3 அறிவிப்பு புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

இதில், ரீனா தனது தந்தையுடன் சேர்ந்து வேறொரு மாநிலத்தில் புதிய மருத்துவமனையில் வேலை பார்ப்பது போலவும், ரதி ஆர்.கே மருத்துவமனையில் தனது மகளை நினைத்து ஏங்குவது போலவே காட்டியுள்ளனர். மேலும், Heart Beat சீசன் 3 வருகிற ஜூலை 30-ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment