ஷாலினி அஜித்குமார் வழங்கும்"-தயாரிப்பாளராக களமிறங்கும் மாஸ் ஜோடி! 'AK64' அதிரடித் தொடக்கம்!

 


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார், தனது திரைப்பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டவுள்ளார். 

'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, அவரது 64-வது திரைப்படமான 'AK64' குறித்த அதிரடியான மற்றும் சுவாரசியமான பிரத்யேக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இத்திரைப்படத்தின் மூலம் அஜித் குமார் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார்.

இதுவரை முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்த அஜித் குமார், முதன்முறையாக 'AK' ஹோம் பேனர் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் 'AK64' திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளார்.

 இதன் மூலம் அவர் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் கார்டுகளில் "ஷாலினி அஜித்குமார் வழங்கும்" என்று குறிப்பிடப்படவுள்ளது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஷாலினி அஜித் குமார், இப்படத்தின் தயாரிப்பு பணிகளை முன்னின்று நடத்தவுள்ளார். படத்தின் நிதி மேலாண்மை, தயாரிப்பு செயல்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றப் பணிகளையும் அவரே நேரடியாக மேற்பார்வையிட உள்ளார்.

Post a Comment