நடிகை நயன்தாரா நீல நிற சேலையில், ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையி்ல் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள செம கியூட் புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருவதுடன் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த அவர், தற்போது பாலிவுட்டிலும் தனது திறமையை நிரூபித்து வெற்றிநடை போட்டு வருகிறார்.
குறிப்பாக, ஷாருக்கான் உடன் நடித்த 'ஜவான்' திரைப்படம் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து, அவரது பாலிவுட் அறிமுகத்தை பிரம்மாண்ட வெற்றியாக மாற்றியது.
ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக தனது இடத்தை தக்கவைத்துள்ள நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த அழகிய தம்பதியினர் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக்கொண்டு, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், சினிமாவிலும் அதே உற்சாகத்துடன் பிஸியாக இயங்கி வரும் நயன்தாரா, சமீபத்தில் 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதற்கிடையில், 41 வயதிலும் இளமை மாறாத அழகுடன், நயன்தாரா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "வயது ஏற ஏற அழகும் அதிகமாகிறது என கருத்துக்களை பதிவிட்டு வகின்றனர்.

